ஜெயா டிவியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியவர் சசிரேகா. இவர் அமமுவின் முக்கிய வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் அன்புவின் மனைவி. இவரும் ஒரு வழக்கறிஞர்.

இது மட்டுமல்லாமல் அமமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் சசிரேகா பணி புரிந்து வந்தார். முக்கியமாக அமமுக சார்பில் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதத்தில் பங்கு பெற்று டி.டி.வி.தினகரன் தொடர்பான பிரச்சனைகளில் தனது கருத்துக்களை எடுத்து வைப்பார்.

இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து, சசிரேகா மற்றும் அவரது கணவர்  வழக்கறிஞர் அன்பு ஆகியோர் சற்று ஒதுங்கியே இருந்தனர்.

இந்நிலையில் சசிரேகா மற்றும் வழக்கறிஞர் அன்பு ஆகியோர் இன்று அமமுகவில் இருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர். அதிமுக நிர்வாகி ராஜேஸ் முன்னிலையில் அவர்கள் இருவரும் இன்று அதிமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.