தனது லட்டர் பேடில் மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வரிகளை போட்டு -ஜெயலலிதாவின் பெயரை போட்டுள்ளார் சசிகலா.
சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆன பிறகு முதன் முறையாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் . அதில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில்  நாணயம் மற்றும் அஞ்சல்தலை ஆகியவற்றை வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
பிரதமருக்கு சசிகலா எழுதிய கடிதத்தின்  மூலம் சசிகலாவின் லெட்டர் பேடு மீடியாவின் பார்வைக்கு வந்துள்ளது. அதில்  வலது புறம் ஜெயலலிதாவின்  பொன் மொழியை பொறித்துள்ளார். இடது ஓரத்தில்  சசிகலாவின் பெயர் பெரிதாக இடம்பெற்றிருக்கிறது.
 இடது பக்கத்தில் ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’ என பொன்மொழியை போட்டு அதற்கு கீழே ஜெயலலிதாவின் பெயர் எழுதப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவை மறக்காமல் அவரது பொன்மொழியை தனது லட்டர் பேடில் ஜெயலலிதா பெயருடன் மரியாதை செலுத்தும் வகையில் பொறித்துள்ளார்.