jaya anand meet sasikala in t.nagar
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனைப் பார்க்க, பரோலில் வந்து தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ள சசிகலாவை அவரின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய ஆனந்த் நேரில் சந்தித்து பேசினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக r5 நாள் பரோலில் சென்னை வந்துள்ளார். இளசரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் தியாகராய நகர் வீட்டில் சசிகலா தங்கியுள்ளார்.
மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என பல நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில் சசிகலா தனது கணவரை பார்ப்பதற்காக மருத்துவமனை புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில், அவரின் சகோதரர், திவாகரனின் மகன் ஜெயஆனந்த் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது தற்போதுள்ள அரசியல் நிலை குறித்து பேசினார்களா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
