வரும் 15-ம்தேதி கவுகாத்தி நகரில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் சந்தித்து பேசுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் கலவரமும், போராட்டமும் நடப்பதால், ஜப்பான் பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் எனத் தெரிகிறது.


இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறுகையில் “ வரும் 15 முதல் 17-ம் தேதிவரை கவுகாத்தியில் இந்தியா-ஜப்பான் பிரதமர்கள் இடையிலான சந்திப்பு நடக்குமா என உறுதியாகக்கூற முடியாது. 

அது குறித்து எந்த தகவலும் அரசிடம் இருந்து இல்லை, ஜப்பான் அரசும் பங்கேற்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவி்த்தார்


கடந்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 15 முதல் 17-ம் தேதிவரை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் டன் கவுகாத்தியில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர் என அறிவித்தது. இப்போது ஜப்பான் பிரதமர் வருகை குறித்து ஏதும் தகவல் இல்லை எனத் தெரிவித்துள்ளது


குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருவதால், இந்த நேரத்தில் வெளிநாட்டு பிரதமருடன் சந்தி்ப்பு நடத்துவது உகந்ததாக இருக்காது என மத்திய அரசு கருதுகிறது.