ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக தமிழகம் எங்கும் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய புரட்சி ஏற்ப்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த இந்த போராட்டம் உலகையே திருப்பிப் பார்க்க வைத்தது.
அறவழியில் நடைபெற்ற இந்த உரிமைப் போராட்டத்தின் விளைவாக முதலமைச்சர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். இதனையடுத்து அங்கேயே தங்கியிருந்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அது நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் எடுத்த முழு முயற்சியால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மோடியிடம் போனில் பேசியே காரியம் சாதித்ததாக கூறினார்,

சசிகலா இல்லையென்றால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வாங்கியிருக்க முடியாது என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்ட அப்பகுதி மக்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.
