Asianet News TamilAsianet News Tamil

JaiBhim:சூரப்புலி சூர்யா பொத்திக்கிட்டு சும்மா இரு.. சந்துரு யோக்கியர் இல்ல.. டாராக கிழித்தEx காவல் அதிகாரி.

இரண்டு வழக்குகளுக்கும் பணம் வாங்கிக் கொண்டு வழக்கில் இருந்து ஒதுங்கிய செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது வழக்கு நடத்த வேண்டும் என சந்ருவிடம் வலியுறுத்தினேன் அப்போது என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே  செல்வராஜ் போல ஒரு யோக்கியர் இல்லை,  

Jai Bhim:Suriya should be silent .. Chandru not honesty.. ex police officer shocking.
Author
Chennai, First Published Nov 22, 2021, 1:19 PM IST

சூர்யா முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதியைப் போல கதை வசனம் எழுதி 100 படம் எடுத்தால் கூட இந்து மதத்தை அழிக்கவும் முடியாது  இந்தியாவை அசைக்கவும் முடியாது என முன்னாள் காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் எச்சரித்துள்ளார். ஜெய்பீம் திரைக்கு வந்தது முதல் சந்துரு, சந்துரு என பவரும் புகழ் பாடி வருகின்றனர். ஆனால் வழக்குக்காக சென்ற தன்னை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பியவர்தான் சந்துரு என்றும்,  அந்த வழக்கை அவர் நடத்தியிருந்தால் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீது பெரிய ஊழல் முத்திரை  விழுந்திருக்கும் என்றும், ஆனால் அதை தட்டிக்கழித்தவர்தான் சந்துரு என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் அதே வேளையில் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது ஜெய் பீம் திரைப்படம்.  இப்படம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பை, ஆதரவை பெற்று வரும் அதே நிலையில், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் எதிர்ப்பு உக்கிரமடைந்துள்ளது. 

Jai Bhim:Suriya should be silent .. Chandru not honesty.. ex police officer shocking.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி,  திராவிட இயக்கங்கள் சூர்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பாமகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என பாமக தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் காவல் துறை அதிகாரியாக இருந்தவரும், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் சிபிஐ அதிகாரி மோகன்ராஜ், சூர்யாவை எச்சரித்தும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 

Jai Bhim:Suriya should be silent .. Chandru not honesty.. ex police officer shocking.

சூர்யா ஜெய்பீம்மென படம் எடுத்தாலும் எடுத்தார் நீதியரசர் சந்துருவை பற்றி பலரும் சந்துரு சந்துரு என  புகழ் பாடி வருகின்றனர். பொதுவாக நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், காவல்துறையில் அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். காவல்துறையில் சேர்ந்த புதிதில் கைதிகளை போலீசார் அடித்தால் நான் உடனே காவல் நிலையத்தை விட்டு வெளியில் சென்று விடுவேன், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது, ஆனால் ஒருமுறை கைதி காவல் நிலையத்தில் ஒரு பல்லியை பிடித்து சாப்பிட்டு விட்டார், நான் அதை பார்த்து பதறி விட்டேன், ஆனால் உயிருடன் இருக்கும் பல்லியை விழுங்கினால் ஒன்றும் ஆகாது என காவல் ஆய்வாளர் கூறினார். பிறகு நானே அந்த கைதியை சராமாரியாக அடித்தேன், போலீசை பொறுத்தவரையில் கைதி எந்த சாதி  என்றெல்லாம் பார்க்க மாட்டோம், அவர்களுடைய செயல்பாடுகளை பொறுத்து தான் நடவடிக்கைகள் இருக்கும். நான் சந்ரு விஷயத்துக்கு வருகிறேன்,

1997 செல்வராஜ் என்ற வழக்கறிஞர் இருந்தார், அவர் பழைய ஜனதா கட்சிக்காரர் அவரிடம் உமாசங்கர் ஐஏஎஸ் 2 வழக்குகளை கொடுத்தார். அது ஜெயலலிதா தொடர்பான ஊழல் வழக்கு, அதை கருணாநிதியிடம் கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்பதால் வழக்கு  நடத்த வேண்டுமென உமாசங்கர் செல்வராஜை சந்தித்தார், அது எனது தந்தையின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது, எனது தந்தையும் ஜனதா கட்சியில் இருந்தவர். பிறகு இந்த வழக்கு தொடர்பாக எனது தந்தையாரிடம் வந்து பேரம் பேசப்பட்டது, ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை, பிறகு என்னிடம் வந்து 2 கோடி பேசினார்கள். பிறகு பாலம் கட்டிய விவகாரம் தொடர்பாக செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்தார். அதற்காக அவர் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஒதுங்கிவிட்டார், பின்னர் அது தொடர்பான டாக்குமென்ட்களை நான் செல்வராஜிடம் இருந்து பெற்று அதுதொடர்பான வழக்கு நடத்த ஒரு நல்ல வழக்கறிஞர் வேண்டும் என பார் கவுன்சிலில் விசாரித்தேன். அப்போது  சந்துருவை சிபாரிசு செய்தார்கள். அதன்பேரில் அப்போது வழக்கறிஞராக இருந்த சந்துருவை நான் அனுகினேன். 

Jai Bhim:Suriya should be silent .. Chandru not honesty.. ex police officer shocking.

இரண்டு வழக்குகளுக்கும் பணம் வாங்கிக் கொண்டு வழக்கில் இருந்து ஒதுங்கிய செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது வழக்கு நடத்த வேண்டும் என சந்ருவிடம் வலியுறுத்தினேன் அப்போது என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே  செல்வராஜ் போல ஒரு யோக்கியர் இல்லை, முதலில் உன் அப்பாவைப் போய் விசாரி, அவர்தான் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார்,போ உன் அப்பாவைதான் இதில் விசாரிக்க வேண்டும் என சந்துரு முகத்தில் அடித்தார் போல கூறினார். அது பரவாயில்லை ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு, கருணாநிதி மீதான ஊழல் வழக்குகளை நடத்த வேண்டுமென கூறினேன், ஆனால் அதை நடத்த முடியாது என அவர் மறுத்து விட்டார். அன்று அவருக்கிருந்த செல்வாக்கிற்கு அவர் அந்த வழக்குகளை எடுத்து நடத்தி இருந்தால், நிச்சயம் திமுக மீது ஊழல் முத்திரை குத்தியிருக்க முடியும். ஆனால் அதை அன்று தட்டிக்கழித்தவர் சந்துரு. சந்துரு ஒரு சூரப்புலி.. சூரியா நாட்டை காப்பாற்றுவார்கள் என பலர் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்ணாதுரை கருணாநிதி போல எத்தனை திரைக்கதை வசனம் எழுதி படமெடுத்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது, இந்தியாவையும் அசைக்க முடியாது அதனால் சூர்யா பொத்திக்கிட்டு சும்மா இரு என அவர் பேசியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios