Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim:ஜெய்பீம் நல்லா இருக்கு.. ஆனால், எந்த சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் எடுத்திருக்கலாம்.. பாஜக அண்ணாமலை

வைகோவின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான். அவரை நேரில் சந்தித்த போது பல முறை அவரிடம் இதை தெரிவித்து இருக்கிறேன். முல்லை பெரியாறு விவகாரத்தை பொறுத்தவரை வைகோ இது குறித்து பேசாமல் இருப்பது சரியானது அல்ல. அந்த 5 மாவட்டங்களில் விவசாய மக்களுக்கு மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது.

Jai Bhim good movie; But it could have been taken even better... BJP Annamalai
Author
Tamil Nadu, First Published Nov 14, 2021, 3:44 PM IST

கூட்டணி கட்சியான திமுகவுக்கு வைகோ சப்பை கட்டு கட்டுவது ஏற்புடையது அல்ல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை;- ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்தவொரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு பார்க்க வேண்டிய படம் என்றார். அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. நகரப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றார். 

Jai Bhim good movie; But it could have been taken even better... BJP Annamalai

வைகோவின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான். அவரை நேரில் சந்தித்த போது பல முறை அவரிடம் இதை தெரிவித்து இருக்கிறேன். முல்லை பெரியாறு விவகாரத்தை பொறுத்தவரை வைகோ இது குறித்து பேசாமல் இருப்பது சரியானது அல்ல. அந்த 5 மாவட்டங்களில் விவசாய மக்களுக்கு மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. 

Jai Bhim good movie; But it could have been taken even better... BJP Annamalai

இது குறித்து அவர் பேச வேண்டுமென்று நான் தெரிவித்து இருந்தேன். இதற்கு அவர் கொடுத்திருக்கும் அறிக்கை ஏற்புடையது இல்லை. வைகோ இது குறித்து பேச வேண்டும். கூட்டணி கட்சியான திமுகவுக்கு சப்பை கட்டு கட்டுவது ஏற்புடையது அல்ல. எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர் உண்மையை பேச வேண்டும். கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Jai Bhim good movie; But it could have been taken even better... BJP Annamalai

சமூகவலைதளங்களிலோ அல்லது போனிலோ யாரையோ யாராவது மிரட்டியிருந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். எங்களை விமர்சனம் செய்வதில் இருந்தே பாஜக வளர்ந்து வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், தமிழ்நாட்டு நலனுக்காக ஆக்கப்பூர்வ விஷயங்களை முன்னெடுப்போம். இதற்கு பாஜக அசையாது. நீங்கள் எரிகின்ற ஒருவ்வொரு கல்லையும் எடுத்து பாஜக ஒரு கோட்டையை கட்டி பாஜக ஆட்சிக்கு வரும் என கூறியுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios