Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு... ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்..!

அரசு ஊழியர்கள் -ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டட்தை வாபஸ் பெறுவதாகவும் வேலை நிறுத்தப்போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. 
 

jactto geo protest withdrawl
Author
Tamil Nadu, First Published Jan 30, 2019, 5:33 PM IST

அரசு ஊழியர்கள் -ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டட்தை வாபஸ் பெறுவதாகவும் வேலை நிறுத்தப்போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

 jactto geo protest withdrawl

ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களை திருப்பி வேலைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. 400கும் மேற்பட்ட ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்தது.

jactto geo protest withdrawl

இதையடுத்து, இன்று சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போராட்டத்தை கைவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கோரிக்கையினை ஏற்று, போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தலைவர் அந்தோணி சாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்த போராட்டமும், தலைமை செயலக ஊழியர்கள் போராட்டமும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios