Asianet News TamilAsianet News Tamil

கைது செய்தாலும் முற்றுகை போராட்டம் உண்டு -ஜாக்டோ -ஜீயோ உறுப்பினர்கள் உறுதி

Jacto geo strike in tamil nadu
Jacto geo strike in tamil nadu
Author
First Published May 7, 2018, 11:47 AM IST


நாளை ஜாக்டோ ஜீயோ உறுப்பினர்கள் கோட்டையை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்த உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்

Jacto geo strike in tamil nadu

 “தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்” எனவும் ஆக்கபூா்வமாக செயல்பட்டு மக்கள்நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருங்கள்” எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஊதிய உயா்வு முரண்பாடுகள் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்ட குழு அரசு ஊழியா் சங்கங்களிடன் குறைகளை கேட்டுவருகிறது. மேலும் அரசின் வருவாயான ரூ.93,795 கோடியில் இருந்து அரசு ஊழியா்களுக்ககு மட்டும் ரூ.65,403 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை தொடா்ந்து, 19.42 லட்சம் அரசு ஊழியா் குடும்பங்களுக்கு அரசின் மொத்த வரிவருவாயில்  இருந்து  70 சதவீதம்  செலவிடப்படுகிறது. பின்னா்   மக்களின் நலன் கருதி அரசு ஊழியா்கள் சிறப்பாக செயல்பட்டு பொறுப்புணா்வோடு கடமையாற்ற வேண்டும். இந்நிலையில் அரசுக்கு எதிராக போராடுவதை கைவிட வேண்டும். இவ்வாறு அவா் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Jacto geo strike in tamil nadu

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.  மாவட்ட வட்ட நிர்வாகிகள் கைது செய்து போரட்டத்தை வலுவிலக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கைதை கண்டித்து பிற ஊழியர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர் மேலும் பல அரசு ஊழியர், சங்க நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். அரசு காவல்துறையை ஏவி அடக்கு முறையில் ஈடுபட்டாலும் நாளை போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ -ஜியோ உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios