பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு திமுகவை விமர்சித்ததால் ஒரே நாளில் அரசியல் வானில் ஜொலி ஜொலிக்கிறார் மாரிதாஸ்.

பாஜகவினர் மாரிதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தமிழக பிரதிநிதிகள் மாரிதாஸை  அமித் ஷா அல்லது ஜே.பி.நட்டா ஆகியோரிடம் அழைத்து சென்று முக்கிய பொறுப்பை வாங்கிக் கொடுக்க முயன்று வருகின்றனர். 

சமூகவலைதளங்களில் மாரிதாஸுக்கு எழுந்து வரும் ஆதரவுகளை வைத்து தமிழகத்தில் பாஜகவை முன்னேற்ற பல திட்டங்களை தீட்டிக் கொடுத்து வருமானத்திற்கு வழிவகை செய்து கொடுத்து பாதுகாப்பையும் அளிக்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். ஆகையால் முன்பை விட சமூக வலைதளங்களில் மாரிதாஸை மேலும் ஆக்டிவாக்க திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்படுபவர். மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றின் பேராசிரியர். தமிழ் தேசியம், கம்யூனிஷம் பேசுபவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். பெரிய அரசியல் ஞானிபோல் பேசினாலும் அவரது பேச்சில் பாமரத்தனம் பளிச்சிடும். கடந்த 2018ம் ஆண்டு, “ஏன் நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்” என்று புத்தகம் வெளியிட்டிருந்தார்.

ஆனால், மாரிதாஸ் ரஜினி ஆதரவாளராக இருந்து வருகிறார். இதனால் அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவார். பாஜகவில் இணையமாட்டார் எனவும் கூறப்படுகிறது.