தமிழக அரசின் புதிய தலைமை செலயாளராக சண்முகம், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர், இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைமை செயலாளராக நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகத்தை புதிய தலைமை செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்தவர். 

கே.சண்முகம் வகித்த பதவியில் வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். அவர், தமிழகத்தின் நிதித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றுவார்.

தமிழக டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு பெற்றிருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு பதிலாக அந்த இடத்தில் புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.  திரிபாதி ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர். சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்தவர்.  சென்னை மாநகர காவல்துறையில் வெகுகாலம் பணியாற்றி வந்தவர்.