அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் என ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். விரைவில் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தையின் தொகுதியை கைப்பற்றியே தீருவேன் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சார்பில் தீபா களமிறங்கினார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இந்நிலையில் திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருவாரூர் தொகுதியில் அதிமுக, அமமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என தற்போது நான்கு முனை போட்டி உறுதியானது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தாம் போட்டியிட போவதில்லை திட்டவட்டமாக அறிவித்தார். 

இந்நிலையில் சேலத்தில் பேட்டியளித்த அவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனி்ச்சாமி தலைமையிலான அதிமுக அணியில் இணைந்து செயல்பட விருப்பம் என ஜெ.தீபா அதிரடியாக கூறியுள்ளார். அதிமுகவுடன் இணைவது தொடர்பாக தொண்டர்களிடம் கருத்துகேட்ட பிறகு முடிவு எடுக்கப்படும். மேலும் ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தலையீடுகள் அழுத்தத்திற்கும் இடையே செயல்படுகிறது. ஆகையால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.