தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சை பலனளிக்காமல்  மரணமடைந்தார்.  

ஜெயலலிதாவின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவரது கணவன் மாதவனும் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினர். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தீபா; தமிழகத்தில் வரவுள்ள இடைத்தேர்தலை  மனதில் வைத்தே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அதிமுக அமைதி பேரணி நடத்துகின்றனர். அவரது மரணம் தொடர்பான ஒரு நபர் விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும்,ஜெயலலிதா வழியை இந்த அதிமுக அரசு சரியாக பின்பற்றவில்லை என்றும்  கூறியுள்ளார்.

என்னதான் தனது கணவனோடு சண்டையிட்டுக்கொண்டாலும் தனது அத்தையின் நினைவு நாளுக்கு அவரது சமாதிக்கு கணவரோடு அதிகாலையிலேயே வந்து அஞ்சலி செலுத்தியது அதிமுக தொண்டர்களை நெகிழவைத்துள்ளது.