பாகிஸ்தான் தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பேசிய அவர், ‘’ பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களுக்கு சென்றே, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினோம். இதுவரை யாருமே கண்டிராத நடவடிக்கையை தீவிரவாதிகளுக்கு எதிராக பாஜக அரசு எடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போதிய நடவடிக்கையே எடுக்கவில்லை

.

தீவிரவாதிகளை அவர்களது இருப்பிடங்களுக்கு சென்றே நாம் தாக்கினோம். இதுபோன்ற பதிலடியை தீவிரவாதிகளும் அவர்களது தலைவர்களும் எதிர்பார்க்கவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தான் தூங்கி கொண்டிருந்த நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. காலை 5 மணிக்கெல்லாம் 'மோடி நம்மை தாக்கிவிட்டார்' என அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூறத் துவங்கினர்.

உரி தாக்குதலின் போதும், முந்தைய அரசுகளை போல நாம் அமைதியாக இருப்போம் என தீவிரவாதிகள் எண்ணினர். ஆனால், நாம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்தோம்" என்று அவர் கூறினார்.