செய்யாதுரை நிறுவனத்தில் பங்குதாரரான  எடப்படியின் சம்பந்தி  சுப்பிரமணியனிடம் வருமானவரித்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் எஸ்.பி.கே நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும்  அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறை அதிகாரிகளின் சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூட்டை மூட்டையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய 180 கோடி ரூபாய் பணம், 150 கிலோ தங்கம் என மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.  

இன்றும் இரண்டாவது நாளாக தொடரும் சோதனையில் மேலும் பல ஆவணங்களும் கணக்கில் வராத பணம், சொத்துக்குறித்த ஆவணங்கள் மற்றும் தங்கம் சிக்கலாம் என கூறப்படுகிறது.

இரண்டாவது நாளாக சாதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடந்த இந்த சோதனையில் செய்யாதுரையிடம் இருந்து ரூ. 163 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செய்யாதுரை நிறுவனத்தில் பங்குதாரரான   சுப்பிரமணியனிடம் வருமானவரித்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் எடப்படியின் சம்பந்திதான் இந்த சுப்பரமணியன் இவர் எடப்பாடி மகன் மிதுன் மாமனார். ஐடி ரெய்டில் சிக்கியிருக்கும் செய்யாத்துரையின் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் சுப்ரமணியனை சென்னையில் ரகசியமான இடத்தில் வைத்து வருமானவரித்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 163 கோடி ரொக்கத்தில் பங்கு உண்டா? என சுப்பிரமணியத்திடம் கேள்வி கேட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரத்தை கேட்டுள்ளதாக தெரிகிறது. முதல்வரின் சம்பந்தியிடமே வருமானவரித்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை செய்துவருவதால், ஆளும் கட்சியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.