செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான முக்கிய புள்ளி.. வசமாக சிக்கிய மைதிலி - ஐடி சோதனையில் பரபரப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவ ருகின்றனர். கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் திமுகவினர் அங்கு குவிந்தனர்.
அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். நடந்த தள்ளு முள்ளுவில் நான்கு அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி கரூர் எஸ்.பி முதல் டிஜிபி வரை பலரும் விளக்கம் கொடுக்க தமிழகம் முழுக்க இந்த சோதனை பெரும் புயலையே கிளப்பியது என்று கூறலாம்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இதற்கு மத்தியில், கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. அதுகுறித்து அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது கரூர் மற்றும் கோவையில் செந்தில்பாலாஜியின் வட்டாரங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் கரூரில் கட்டப்பட்டு வரும் அந்த பிரம்மாண்ட வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது, " சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை.
இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?
எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமானவரித்துறை சோதனை நடக்கிறது" என்று விளக்கம் அளித்தார். திமுக நிர்வாகியும், கணக்காளருமான மைதிலி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. பாஜக மகளிரணியைச் சேர்ந்த மைதிலி வினோ அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் இணைந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுப் பயணத்தின் போது மைதிலி லினோ திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் பலர் இடையே இன்று வரை விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் தகவல்கள் கிடைக்கலாம் என்று ஐடி அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?