திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின் அது இன்னும் தீவிரமடைந்துள்ளது. அரசு மீது ஆளுநர் குற்றம்சாட்டியதை அடுத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. இதுஒருபுறம் என்றால் மறுபுறம் ஆளுநர் நிகழ்ச்சிகளில் பேசுவது சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் அவரது கருத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு.. கொந்தளித்த நெட்டிசன்கள் - விளக்கமளித்த அமைச்சர் பிடிஆர்!
அந்த வகையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பழங்குடியின பெருமை தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. விழாவில் கந்துக்கொண்டு பேசிய அவர், திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக இருந்து வந்தது.
இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு… பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றி வருவது தவறு. பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இரு விதமான இடஒதுக்கீட்டை வழங்குகின்றன. மாநிலத்தை பொறுத்த வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு மாநில அரசு 1% இட ஒதுக்கீடு வழங்குகிறது. இது குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
