Asianet News TamilAsianet News Tamil

நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு...யார் காரணம்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

it is unfair to show discrimination in casualties says anbumani ramadoss
Author
First Published Oct 5, 2022, 9:09 PM IST

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம்  மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில்  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது. இந்தத் தவறுக்கு அதிகாரிகளின்  அலட்சியம் காரணமா அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: குறுவை பயிர் சேதம் குறித்து ஈபிஎஸ் அறிக்கை... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!!

நடந்த தவறை சரி செய்யும் வகையில் ஜூலை மாதம் இறந்த  மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios