Asianet News TamilAsianet News Tamil

சாவர்கர் ஆங்கிலோயர்களிடம் மன்னிப்பு கேட்டது உண்மைதான்.. பாஜகவினரை அதிரவைத்த அண்ணாமலை.

இப்போது சாவர்க்கரின் புத்தகம் வந்துள்ளது, திறந்த மனநிலையுடன் படித்து தலைவர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், வா. உ.சி இழுத்த செக்கை என்னால் இழுக்க முடியாது, ஒரு துளி எண்ணெய் ஆனாலும் அது நாட்டுக்கு பயன்படும் என்று செக்கு இழுத்தவர் வா.உ.சி என்றார்.

 

It is true that Savarkar apologized to the British .. Annamalai who shook the BJP.
Author
Chennai, First Published Oct 1, 2021, 8:18 AM IST

எச். ராஜாவின் சர்ச்சைப் பேச்சுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மன்றாடினார். மேலும் சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டது உண்மைதான், அது ஒரு வகையான ராஜதந்திரம் என்றும் அவர் கூறினார். அவரின் மனம் திறந்த இந்த பேச்சு பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் "சாவர்க்கர் கன்ஸ்டன்ட் லெகசி" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், நாட்டில் பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் ஜாதி தலைவர்களாக மாற்றி தலைவர்களை எல்லாம் கூண்டுக்குள் அடைத்து விட்டார்கள். இப்போது சாவர்க்கரின் புத்தகம் வந்துள்ளது, திறந்த மனநிலையுடன் படித்து தலைவர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், வா. உ.சி இழுத்த செக்கை என்னால் இழுக்க முடியாது, ஒரு துளி எண்ணெய் ஆனாலும் அது நாட்டுக்கு பயன்படும் என்று செக்கு இழுத்தவர் வா.உ.சிஎன்றார். 

It is true that Savarkar apologized to the British .. Annamalai who shook the BJP.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தலைவர் எச் .ராஜா செய்தியாளர்கள் குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்தார். எச்.ராஜா அற்புதமான மனிதர், அவரின் பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியது தவறு என்றால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதோடு எச். ராஜா அவர்களின் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பத்திரிக்கையாளர்களை மிகவும் மதிக்கக்கூடிய கட்சிதான் பாஜக, நாங்கள் பத்திரிக்கையாளர்களை வைத்து எந்த இடத்திலும் அரசியல் செய்ததில்லை என்றார். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டா  விவகாரம் குறித்து  எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.

It is true that Savarkar apologized to the British .. Annamalai who shook the BJP.

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என சாவர்க்கர் அடையாளம் காட்டப்படுகிறார், அவர் ஆங்கிலோயர்களிடம் மன்னிப்பு கேட்டது உண்மைதான், ஆனால் அது அரசியல் ரீதியானது ராஜதந்திரம் என்றார். அதேநேரத்தில் காந்தியின் கொலைக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சாவர்க்கர் காந்தியின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளார் இந்து மகாசபையில் இருந்ததால் கோட்சேவை பாஜக ஆதரிக்கிறது என்றார். காந்தியின் கொலைக்கு காரணமான கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றார். அனைவரும் மனம் திறந்து சாவர்க்கரை படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த புத்தகத்தை படித்த பிறகு அவரை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios