திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் பவள விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது குறித்து உறுதி செய்யப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் பவளவிழா, வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரளிசொலி பவள விழாவில், நடிகர் கமல் ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், விழாவில் நடிகர் கமல், கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. முரசொலி பவள விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பெயர்களில் நடிகர் கமல் ஹாசன் பெயர் இடம் பெற்றுள்ளது. 

ஆனால், நடிகர் ரஜினிகாந்தின் பெயர் இடம் பெறவில்லை. இதனால், நடிகர் ரஜினிகாந்த், பார்வையாளராக மட்டும் பங்கேற்பாரா? அல்லது விழாவில் பங்கேற்பதை தவிர்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.