It is not wrong MLAs met dhinakaran - by rajendra balaji
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்தித்ததில் தவறு எதுவும் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெயர்வித்துள்ளார்.
அடிக்கடி பல கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பரபரப்பு புகார் தெரிவித்தார்.
மேலும் ஆவின் பால் மட்டும் தரமாக உள்ளது எனவும் பிரச்சாரம் செய்து வந்தார். மற்ற தனியார் நிறுவன பால்கள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து முத்லாமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி நல்ல பெயரை சம்பாதித்தார்.
ஆனால் அமைச்சர் என்ற முறையில் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சித்தன.
புனே ஆய்வகமும் பால் எதுவும் ஆய்வுக்கு வரவில்லை என மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வசமாக சிக்கினார்.
மீடியாக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை திணற வைத்தனர்.
இதையடுத்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தது. ஆனால் எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடியுடன் நெருக்கத்தில் இருந்த ராஜேந்திர பாலாஜி தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக பச்சை கோடி காட்டியுள்ளார்.
எடப்பாடி தலைமையில் இருக்கும் அமைச்சர்கள் ஒரே அணியாக நிற்கும் போது ராஜேந்திர பாலாஜி மட்டும் தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
கட்சியில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. விரைவில் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
தமிழகத்தில் பேரவை தேர்தல் உடனடியாக நடக்க வில்லை. இரு அணிகளும் இணைய வாய்ப்புள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான். எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்திதத்தில் தவறில்லை.
பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
