Asianet News TamilAsianet News Tamil

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது பெரிய குற்றமில்லை..!! வேலூர் இப்ராஹிம் ஆணவப் பேச்சு..!

"ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என்றும், ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை தற்கொலைப் படையாக மாறி தகர்ப்போம் என்றும், காவல்துறை மற்றும் நீதித்துறையை இழிவாக பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

It is not a crime to pour saffron paint on Periyar statue, Vellore Ibrahim's arrogant speech.
Author
Chennai, First Published Oct 12, 2020, 1:49 PM IST

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது சிறிய குற்றம்தான் என தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத்தின் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார், அவரின் இந்த கருத்து அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் மத்தியிலும், பெரியார் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

It is not a crime to pour saffron paint on Periyar statue, Vellore Ibrahim's arrogant speech.  

ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் அமைப்பின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகம் நோக்கி கவனயீர்ப்பு நடைபயண போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம் கூறியதாவது:- 

It is not a crime to pour saffron paint on Periyar statue, Vellore Ibrahim's arrogant speech.

"ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என்றும், ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை தற்கொலைப் படையாக மாறி தகர்ப்போம் என்றும், காவல்துறை மற்றும் நீதித்துறையை இழிவாக பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 
பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது போன்ற சின்ன சின்ன குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட19 வயது இளைஞரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறை, தீவிரவாதாத்தை ஊக்கவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் இந்த பேச்சி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios