குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்: 

BASL மணம்பூண்டி (விழுப்புரம்) 17 சென்டிமீட்டர் மழையும், RSCL-3 ஆனந்தபுரம்  (விழுப்புரம்), RSCL-2 கேதார்  (விழுப்புரம்), BASL முகையூர் (விழுப்புரம் ), திருக்கோயிலூர்  (கள்ளக்குறிச்சி) தலா 16 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரி  15 சென்டிமீட்டர் மழையும், மயிலம்  AWS (விழுப்புரம்) 13 சென்டிமீட்டர் மழையும் , உளுந்தூர்பேட்டை  (கள்ளக்குறிச்சி) 12 சென்டிமீட்டர் மழையும், கடலூர்   (கடலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 10 சென்டிமீட்டர் மழையும், விழுப்புரம்  (விழுப்புரம்), சங்கராபுரம்  (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு  (கடலூர்) தலா 8 சென்டிமீட்டர் மழையும்,

வேப்பூர் (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம்  (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), வானுர் (விழுப்புரம்) தலா 7 சென்டிமீட்டர் மழையும், காட்டுமன்னார்கோயில் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வீரகனூர் (சேலம்), பெரம்பலூர் (பெரம்பலூர்),பெலந்தூரை (கடலூர்), லப்பைக் குடிக்காடு  (பெரம்பலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), அகரம்  சீகூர்  (பெரம்பலூர்) தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.