It is fashion now to rule people - Seeman reacted to the edappadi

போராட்டங்களை நடத்தி, மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வதால், நாங்கள் தான் வலிமையானவர்கள்.மக்களை சுரண்டி ஆட்சி நடத்துவது அரசுக்கு பேஷன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவதே தற்போது பேஷனாகி விட்டது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

நாங்கள் நடத்திய போராட்டம், நல்ல வழியில் இருந்ததால்தான், நாடு முழுவதும் பேஷனாகி போராட்டங்கள் நடக்கிறது.

போராட்டத்தை நடத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எங்களை போன்றவர்களை விஷமிகள், துரோகிகள் என முதல்வர் குறிப்பிட்டு கூறுகிறார். அப்படியானால், அவர் எங்களை பார்த்து பயந்துவிட்டார் என்பது தெரிகிறது. இதில் இருந்தே நாங்கள் முதல்வரை விட வலிமையானவர்கள் என்பதை அவரே ஒப்பு கொண்டார்.

பூமியை பிளந்து இயற்கை எரிவாயுவை எடுக்கிறார்கள். இதனால், தண்ணீர் மஞ்சளாக மாறிவிட்டது. இளநீர்போல இருந்த குடிநீர், விஷநீராக மாறிவிட்டது. இதற்கு காரணம் ஹைட்ரோ கார்பன் திட்டம்தான்.

இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசாரை வைத்து தடியடி நடத்தி, வழக்கு போட்டுள்ளனர். இதுபோல் 150க்கு மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அவர்களுடன் கைகோர்த்து கொண்டு இருக்கிறது தமிழக அரசு. மக்களை சுரண்டி ஆட்சி செய்வது அரசுக்கு பேஷனாகிவிட்டது.

ஆட்சியில் இருக்கும் வரை பதில் சொல்லாமல் இருக்கலம். விரைவில் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.