Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பலிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

எல்லா கொரோனா நோயாளிகளுக்கு மத்திய, மாநில அரசு நிதி வழங்கவில்லை. கொரோனாவில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க மட்டுமே நிவாரணநிதி வழங்கப்படுகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

It is a hoax that relief funds will be provided for corona victims..Minister ma subramanian
Author
Chennai, First Published Jun 11, 2021, 3:30 PM IST

கொரோனா உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் புரளியை பரப்புவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் 11, ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் 2, யுனானி சிகிச்சை மையம் 1, ஹோமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 27,250 பேர் 69 மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

It is a hoax that relief funds will be provided for corona victims..Minister ma subramanian

சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள கட்டளை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் ஊக்கப்படுத்துவது போல் பழமை வாய்ந்த சித்த மருத்துவத்தையும் மேம்படுத்தப்படும் என கூறினார். ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல்தான் தென் சென்னையில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என கூறப்பட்டது அதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

It is a hoax that relief funds will be provided for corona victims..Minister ma subramanian

எல்லா கொரோனா நோயாளிகளுக்கு மத்திய, மாநில அரசு நிதி வழங்கவில்லை. கொரோனாவில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க மட்டுமே நிவாரணநிதி வழங்கப்படுகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios