எம்ஜிஆரின் ராமவரம் வீட்டிற்கு வர சசிகலாவிற்கு அனுமதி மறுப்பா.?அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! என்ன காரணம் தெரியுமா?
அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலாவிற்கு எம்ஜிஆர் குடும்பத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொன்விழா
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. தொடங்கப்பட்டு வருகிற 17 ஆம் தேதியோடு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வருகிற 17-ந்தேதி 51-வது ஆண்டில் அ.தி.மு.க. அடியெடுத்து வைக்கிறது. அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் தலைமை இடத்தை பிடிப்பதற்காக நடைபெற்ற போட்டியில் 3 பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மத அடிப்படையில் அமைதியை சீர்குலைக்கும் பிரிவினைவாதிகள்..! ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- கூட்டறிக்கை
இபிஎஸ் நிர்வாகிகளோடு ஆலோசனை
நேற்று முன்தினம் சேலத்திலும், நேற்று சென்னையிலும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதே போல ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் கொடி யேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல சசிகலாவும் அதிமுக பொன் விழா ஆண்டை கொண்டாட திட்டமிட்டார். இதற்காக எம்ஜிஆரின் ராமவரம் தோட்டத்தில் அதிமுக கொடியேற்றி ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்திருந்தார்.
ஓபிஎஸ் பற்றி யாரும் பேச கூடாது..? அதிமுகவினருக்கு திடீர் கட்டளையிட்ட எடப்பாடி பழனிசாமி
சசிகலாவிற்கு அனுமதி மறுப்பா..?
ஆனால் இதற்க்கு எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிமுக பொன் விழா ஆண்டை வேறு ஒரு இடத்தில் கொண்டாடுவது தொடர்பாக சசிகலா தனது ஆதரவாளர்களோடு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்