தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆளுநர் பதவி.? பாஜக தேசிய தலைமை முடிவு..! போட்டி போடும் 2 மூத்த நிர்வாகிகள்..!
தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக நிர்வாகிக்கு பதவி
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து வருகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் மூத்த தலைவர்கள். நீதிபதிகள் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுக்கானா மாநில ஆளுநர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.. இதனையடுத்து சில மாதங்களிளேயே புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
யார் அடுத்த ஆளுநர்
இதேபோல தமிழக பாஜக மூத்த தலைவராக இருந்த இல.கணேசனுக்கு மணிப்பூர் மாநில அளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் மேற்குவங்க மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில மாநிலங்களுக்கு ஆளுநர் இல்லாததால் மற்ற மாநில ஆளுநர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்நிலையில்,
போட்டி போடும் பாஜக நிர்வாகிகள்
தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவரின் கடந்த கால கட்சி பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்க பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், மூத்த தலைவர்கள் எச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதற்கான அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்