Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் 20 சட்ட மசோதாக்கள்..! விளக்கம் கேட்ட ஆர்.என்.ரவி- அமைச்சர் ரகுபதி தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 

Minister Raghupathi said that 20 Bills are pending in the Governor House
Author
First Published Nov 10, 2022, 11:31 AM IST

ஆன் லைன் ரம்மி மசோதா

அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் கலந்தாய் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா மீது ஆளுநர் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார் என்றும், மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை விளக்கம் கேட்கவில்லை என்று தெரிவித்தார். கேட்கும் பட்சத்தில் விளக்கம் கொடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறினார்.  

பசுந்தோல் போத்திய புலியாக வெளிவந்த திமுக அரசின் அரசாணை..! தடுத்து நிறுத்திய இபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார்

Minister Raghupathi said that 20 Bills are pending in the Governor House

இட ஒதுக்கீடு- மறு சீராய்வு மனு

ஆளுநர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும் சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு விளக்கமும் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை  திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆசியாவிலேயே தலை சிறந்த 200 கல்வி நிறுவனங்கள்.! அண்ணா பல்கலை. சென்னை ஐஐடிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios