மணிப்பூரில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்..! பாஜக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய திமுக- போராட்ட அறிவிப்பு

தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

It has been announced that a protest will be held on behalf of the DMK women team to condemn the incident in Manipur

மணிப்பூரில் வன்முறை

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று வெளியான வீடியோ ஒன்றில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அலுலவகம் வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், 

It has been announced that a protest will be held on behalf of the DMK women team to condemn the incident in Manipur

பெண்கள் மீது தாக்குதல்- திமுக கண்டனம்

சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி அவர்கள், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார். 

It has been announced that a protest will be held on behalf of the DMK women team to condemn the incident in Manipur

திமுக போராட்ட அறிவிப்பு

இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் 23.07,2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தொடர்ச்சியாக 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திமுக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்..! ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கும் தலைகுனிவு - சரத்குமார் ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios