திருவள்ளுவரின் புகைப்படத்தில் காவி உடை அணிந்து, திருநீற்றுப் பட்டை போட்டு ருத்ராட்சம் மாலை அணிவித்த படத்தை பாஜக தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டு இருந்தது.  இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த,  'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’’என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்

இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக விவாதப்பொருளாகி வருகிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,  திமுக நிர்வாகி அச்சடித்து ஒட்டிய சுவரொட்டியில் கருணாநிதியை வள்ளுவரின் தோற்றத்தை மாற்றி கண்ணாடியுடன் அச்சிடப்பட்ட பழைய சுவரொட்டி புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.  அதெப்படி திமுகவினர் கூலிங் கிளாஸ் மாட்டி விடலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.