திருப்பரங்குன்றம் தொகுதியின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்சின் மகன் திருமணத்தில், கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வதுடன் செல்பி எடுக்க இளம் பெண்கள் போட்டி போட்டுள்ளது அவருக்கு அங்குள்ள மாஸ் வரவேற்பை உறுதி படுத்தியுள்ளது.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே மூன்று முறை, முதலமைச்சர் பதவியில் இருந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு மறு உருவம் என்று அதிமுக தொண்டர்களால் பார்க்கப்பட்டவர். 

இவருக்கு எப்போதுமே, தேனி, பெரியகுளம், மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தொண்டர்கள் உள்ளனர். 

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸின் மகன் திருமண விழாவில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் நேற்று இரவு,  நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். 

அப்போது அங்கிருந்த குழந்தைகளும், பெரியவர்களும், குறிப்பாக இளம் பெண்கள் பலர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அனைவருடனும் செல்பி எடுத்துக்கொண்டார்.

 மேலும், இருவரும் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். போல் வேடம் அனைத்து  நடனமாடியதை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.