Asianet News TamilAsianet News Tamil

நாகரீகமற்ற பேச்சு.. நிதி அமைச்சர் தியாகராஜனை டீசன்டாக டீல் செய்த ஈஷா..!

அமைச்சர் பதவி ஏற்றது முதல் தமிழகத்திலேயே அதிகாரம் பொருந்திய நபர் தான் தான் என்பது போல் செயல்பட்டு வந்த அமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு ஈஷா ஒரே ஒரு அறிக்கை மூலம் அவருடைய நிலையை தெரியப்படுத்தியுள்ளது.

Isha deals with Finance Minister palanivel thiagarajan
Author
Tamil Nadu, First Published May 20, 2021, 10:56 AM IST

அமைச்சர் பதவி ஏற்றது முதல் தமிழகத்திலேயே அதிகாரம் பொருந்திய நபர் தான் தான் என்பது போல் செயல்பட்டு வந்த அமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு ஈஷா ஒரே ஒரு அறிக்கை மூலம் அவருடைய நிலையை தெரியப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் ஈஷா கூறியிருப்பதாவது, கடந்த 30 ஆண்டுகளாக சத்குருவின் வழிகாட்டுதலின்  படி பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தமிழகத்தின் மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகின்றனர். யோகா மட்டும் அல்லாமல் சமூக நலத்திட்டங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு திட்டங்கள் மூலமும் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வில் ஈஷா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈஷா யோகா மையத்தின் சமூக நலத்திட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஆதரவாக இருந்து வருகின்றன.

Isha deals with Finance Minister palanivel thiagarajan

கிராம மக்களுக்கான சுகாதாரம், கல்வி மேம்பாட்டிற்காக சத்குரு துவக்கிய திட்டங்கள் மூலம் சுமார் 7500 கிராமங்களில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஈஷா வித்யா திட்டத்தின் மூலம் சுமார் 9000 ஏழை மாணவர்களுக்கு மிக குறைந்த செலவில் உயர்தரமான கல்வியை வழங்கி வருகிறோம். சத்குரு முன்னின்று நடத்திய நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 16 கோடி பேரின் ஆதரவு கிடைத்தோடு மத்திய அரசு முதன் முதலாக நதிகளை பாதுகாப்பதற்கான தேசிய அளவிலான கொள்கையை உருவாக்குவதற்கான அடிப்படையாகவும் இருந்தது.

Isha deals with Finance Minister palanivel thiagarajan

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நட்டு வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் வாழும் சுமார் 52 லட்சம் மக்கள் பலன் அடையும் வகையில் ஈஷா சார்பில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கெரோனா பேரிடர் சமுதாயத்தில் சுமார் 2 லட்சம் பேருக்கு உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை வழங்கியுள்ளோம். அத்தோடு கொரோனா முன்களப்பணியாளர்கள் 67ஆயிரம் பேருக்கு இலவசமாக அவர்களை தற்காத்துக்கொள்ளும் கவச உடைகளை கொடுத்துள்ளோம். இந்த அனைத்து பணிகளையும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் தான் ஈஷா செய்து வருகிறது.

சர்வதேச அளவில் ஒரு தலைவராக சத்குருவை பல்வேறு அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் ஈஷாவுக்கு கிடைத்துள்ளது. இது தவிர மத்திய அரசின் பத்மவிபூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை சத்குரு பெற்றுள்ளார். இந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த ஒரு தலைவரை,  பப்ளிசிட்டி ஹவுண்ட் அதாவது விளம்பர நாய் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதுஉலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் அவர்களின் சுயநலம் பாரா பணிகளை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளது.

Isha deals with Finance Minister palanivel thiagarajan

நிதி அமைச்சர் தியாகராஜன் இப்படி நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அமையும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றும் ஈஷாவின் சேவைகள் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஈஷா கூறியிருந்தது. இந்த அறிக்கையை எந்த முன்னணி ஊடகங்களும் வெளியிடவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த அறிக்கை விவாதப்பொருள் ஆனது. கொரோனாவால் தமிழகமே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் உதவிக் கொண்டிருக்கும் ஈஷாவை அமைச்சர் குறி வைப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்தது.

Isha deals with Finance Minister palanivel thiagarajan

ஆனால் தியாராஜன் மீது வழக்குப் பதிவு செய்வோம், மானநஷ்ட வழக்குப் போடுவோம் என்றெல்லாம் ஈஷா எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. இதுநாள் வரை தாங்கள் செய்தது என்ன என்பதை மட்டுமே அறிக்கையாக வெளியிட்டது. இதுவே தியாகராஜனின் நாகரீகமற்ற பேச்சுக்கு சரியான பதிலடியாக இருந்தது.  அத்தோடு நாங்கள் செய்து வரும் சேவைக்கும் உங்கள் அரசியலுக்கும் துளியும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது போல் அந்த அறிக்கை இருந்தது. அதாவது எங்ககிட்ட மோதாதீங்க, ஓரமா போய் விளையாடுங்க என அமைச்சரை டீசன்டாக டீல் செய்துள்ளது ஈஷா.

Follow Us:
Download App:
  • android
  • ios