மாற்றான் மனைவியை கொண்டாட சட்டத்தில் அனுமதி வேண்டும் என்று எழுதிய நோட்டீசும் போட்டு அச்சடிக்கப்பட்ட பெரியார் விவகாரத்தை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட ஆதாரத்தோடு ஹெச்.ராஜா பகிர்ந்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘’சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவனும், சமீபத்தில், கிருஷ்ண பரமாத்மாவையும், பகவத்கீதையையும் இழிவாகப் பேசி திருச்சியில் எதிர்வினையை நேரில் சந்தித்த கி.வீரமணியும் பண்பாடு நாகரிகம் குறித்து பேசுவது விநோதமாக உள்ளது. இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதோ’’ எனக் கேட்டுள்ளார்.

அடுத்து தனது முகநூல் பக்கத்தில், ‘’சேலத்தில் ஹிந்து கடவுளை ஈவெரா அவமதித்ததை கண்டித்து ஆத்திக சங்கத்தை சேர்ந்த சின்ன அண்ணாமலை அவர்கள் ஒரு சுவரொட்டி அச்சிட்டார் அதை தமிழக அரசு தடை செய்து அந்த போஸ்டர்களை கைப்பற்றியது. ஆனால் சின்ன அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

அதில் அந்த சுவரொட்டியில் ராமனையும் முருகனையும் ஈவெரா வலது கையில் செருப்பை வைத்துக்கொண்டு அடிப்பதுபோலும் இடது கையில் மாற்றான் மனைவியை கொண்டாட சட்டத்தில் அனுமதி வேண்டும் என்று எழுதிய நோட்டீசும் போட்டு அச்சடிக்கப்பட்டது. 24-02-1971 ஆணையின் படி சென்னை உயர்நீதிமன்றம் அரசு கைப்பற்றிய போஸ்டர்களை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.