செய்யாறு பகுதி  திமுக இளைஞரணி செயலாளரால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செயப்பட்ட விவகாரத்தில் சசிகலாவுக்கு நியாயம் வேண்டும் என உதயநிதி- ஸ்டாலின் ஆகியோரை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை...தி.மு.க நிர்வாகியை கண்டித்து உதயநிதி நியாயம் கேட்பாரா? என்கிற தலைப்பில் செய்யாறு பெண் விவகாரத்தை பற்றி ஏசியாநெட் இணையத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், ‘’ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்து பெண்ணை கொலை செய்த செய்யூர் பகுதி தி.மு.க இளைஞரணி செயலாளர் தலைமறைவாகி விட்டார். இந்தச்சம்பவத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நியாயம் கேட்பாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே நைனார் குப்பத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட தி.மு.க இளைஞரணி செயலாளரார் தேவேந்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் தொல்லைக்கு இணங்காததால் படுகொலை செய்த தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் தலைமறைவாகியுள்ளார்.

 

இந்நிலையில், மற்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நொடிக்கொரு அறிக்கை என ஸ்டாலினும், மணிக்கொடு ட்விட் செய்து விமர்சனம் செய்யும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்திற்காக வாய் திறக்கவில்லை. ஆகையால், உதயநிதி தலைமையிலான தி.மு.க இளைஞரணியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யார் நீதி பெற்று தருவார்? என அபலரும் நியாயம் கேட்டு வருகின்றனர். மற்றவர்களுக்கு இரு நியாயம், தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயமா எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

 

இதுகுறித்து திமுக தலைமை மவுனம் கலையுமா? வாய் திறப்பாரா உதயநிதி ஸ்டாலின்...? எனக் கேள்வி எழுப்பி இருந்தோம். இந்த செய்தியை பலரும் பகிர்ந்து #JusticeForSasikala என்கிற ஹேடேக்கை உருவாக்கி பலரும் பாதிக்கப்பட்ட பெண்ணான சசிகலாவுக்கு ஆதரவாகவும், உதயநிதி இந்தக் கொடுமைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.