அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கு.? திருமாவளவன் மிக சிறந்த தலைவர்.. மாஸ் காட்டிய பா. ரஞ்சித் .
அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்ல முடியாது, வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு கலைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அது நடக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்ல முடியாது, வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு கலைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அது நடக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அக்ரகாரத்திற்கும், ஆண்ட சாதிகளுக்கும் மட்டுமே சொந்தமாக பார்க்கப்பட்ட சினிமாவை சேரிக்கு கொண்டு வந்து புரட்சி பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், எளிய மக்கள், குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை திரையில் காண்பித்து, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தி உச்சம் தொட்ட இயக்குனராக பா. ரஞ்சித் உள்ளார். சேரி மக்களின் வாழ்வியலைப் பேசியே தனது அடையாளத்தைத் தேடிக் கொண்டவர் அவர். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி காலா என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அதில் புரட்சிகர வசனங்களை இடம்பெறச் செய்து விளிம்புநிலை மக்களின் குரலாக ஒழித்தார், ஆனால் சாதி ரீதியான முத்திரை அவர் மீது விழுந்துள்ளது, அவரது படங்களை முன்னணி நிறுவனங்கள் நடிகர்கள் தவிர்த்த நிலையில் தனது படங்களில் தானே இயக்கத் தொடங்கினார், அதில் வெற்றியும் கண்டார், தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்றும் அழைக்கப்படுகிறார், கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் நீலம் புரடெக்ஸன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், உள்ளிட்ட ஐந்து இயக்குனர்களின் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: திமுக அதிமுகவுக்கு சிவாஜி மீது ஏன் வெறுப்பு.? நீங்க திறக்க வில்லை என்றால் சிலையை நான் திறப்பேன்.. சீமான்.
தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து பணம் சம்பாதிக்கும் இயக்குனர்கள் மத்தியில் சமூக சிந்தனையோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்குனராக இருந்து வருகிறார் ரஞ்சித், தான் இயக்கிய திரைப்படத்தில் ராம பக்தனை வில்லனாக காட்டக் கூடிய அளவிற்கு துணிச்சல் கொண்டவராக ரஞ்சித் உள்ளார். சமூகநீதி, இட ஒதுக்கீட்டில் சமரசம் இல்லாமல் திரையில் களமாடி வருபவர் அவர், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா சார்பட்டா பரம்பரை என பல படங்கள் இயக்கி வெளியிட்டுள்ளார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: செருப்பை வழிபட்டவர்கள்தான் பாஜகவினர்.. அண்ணாமலையை டீல் பண்ண ஸ்டாலினுக்கு தெரியும்.. கி. வீரமணி கலாய்.
அதில் LGBTQ சமூகத்தினரின் உரிமையை பேசும் படமாக இது உள்ளது. இந்நிலையில்தான் ரஞ்சித்திடம் தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணம் நடத்தியுள்ளது. அதில் அவரிடம் வைத்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் சூடாகவும் சுவையாகவும் பதில் அளித்துள்ளார். பலரும் எதிர்பார்ப்பது போல ரஞ்சித் கட்சி தொடங்குவரா, அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியை அந்த யூடியூப் சேனலும் முன்வைத்துள்ளது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:-
அரசியல்வாதியாக நான் ஆவேனா என்று தெரியவில்லை, இப்போதைக்கு கலை இலக்கியங்களில், கலாச்சார ரீதியாக வேலை செய்வதுதான் என் எண்ணம், அதைதான் நான் என்னுடைய இலக்காக வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் பின்னால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை,ஆனால் அரசியலுக்கு வருவதற்கு, அரசியல்வாதியாக மாறுவதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அதை மிகவும் சந்தோஷமாகத்தான் என்ஜாய் செய்வேன். ஆனால் எனக்கு இப்போதைக்கு அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன், எதிர் காலத்தில் அரசியல்வாதியாக இருந்தாலும் இருக்கலாம் அது இப்போது எனக்கு தெரியவில்லை.
அதற்கு நான் யோசிக்க வேண்டும், சினிமா எடுக்க வேண்டும் என்று நான் தான் யோசித்தேன், அம்பேத்கரைப் பற்றி பேச வேண்டும் என்று நான் தான் யோசித்தேன், நான் சினிமாவுக்குள் வரும்போது கூட அம்பேத்கரைப் பற்றி பேசாதே என்று தான் சொன்னார்கள், ஆனால் நான் அம்பேத்கரை பேசித்தான் படம் எடுப்பேன் என்று வந்தேன், எனக்கு தோன்றினால் அதைப்பற்றி நான் யோசிப்பேன், தமிழ் சூழலில் மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடிய தலைவராக திருமாவளவன் இருக்கிறார், தலித் அமைப்புகள் இந்தியா முழுவதும் இருக்கிறது, மதவாதத்தை சனாதனத்தை எதிர்க்கக்கூடிய தலைவராக தொடர்ந்து திருமாவளவன் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ரஞ்சித் கூறினார்.