நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் பரப்புகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுபவன் நான் அல்ல என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

அதிமுகவில் கோஷ்டி மோதலை ஏற்படுத்தி முதல்வர் எடப்பாடியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரித்தது அமைச்சர் தங்கமணி தான். துணை முதல்வர் பதவியை குறிவைத்து தங்கமணி கட்சியில் செயல்படுவதாகவும் கூறப்பட்டது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும். ஓபிஎஸ்சை ஓரங்கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததாக பிரபல நாளிதழில் செய்திகள் வெளியாகின.

 

இந்நிலையில், வேலூர் பேரணாம்பட்டு பிரச்சார பொதுக்கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், நான் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவன் இல்லை. நான் துணை முதல்வராக முயற்சிப்பதாக சிலர் பொய்யான தகவலை பரப்புகின்றனர். இந்த ஆட்சியை காப்பாற்றுவதன் தான் எனது பணி. துணை முதல்வராகும் ஆசை எனக்கில்லை. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வை பிளவு படுத்த நினபை்பவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.