Asianet News TamilAsianet News Tamil

2 ஆயிரம் ரூபாய் வரை கார்டு ஸ்வைப் பண்றீங்களா ?  இனி பறிமாற்ற கட்டணம் இல்லை…

Is the card swipe up to 2 thousand rupees? There is no longer a transaction fee ...
Is the card swipe up to 2 thousand rupees? There is no longer a transaction fee ...
Author
First Published Jan 2, 2018, 7:31 AM IST


டெபிட் கார்டு மூலம் 2 ஆயிரம ரூபாய் வரை பொருட்கள் வாங்கிவிட்டு கார்டு ஸ்வைப் பண்ணினால் இனி பறிமாற்றக் கட்டணம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைளை  மத்திய அரசு தொடங்கியது. இதையடுத்து ரொக்க பணப்பறிமாற்றங்களை குறைத்துக் கொண்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணப்பறிமாற்றங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு கட்டாயமாக்கும் முயற்சிகனை மேற்கொண்டது. பணப்பறிமாற்றத்துக்கு கார்டுகளை பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்க பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிமாற்ற கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி டெபிட் கார்டு, பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டணம் செலுத்துதலுக்கு ரூ.2 ஆயிரம் வரை பரிமாற்ற கட்டணம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது . 

இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இது 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மத்தியதர மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios