திருட்டை திமுகவுக்கு பிரஷாந்த் கிஷோர் கற்றுத்தருகிறாரா..? கற்றுக் கொடுக்கிறாரா..?  ஒன்றுமே புரியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். 

அரசியல் திட்டமிடலில் சிறந்து விளங்குவதாக கூறப்படும் பிரசாந்த் கிஷோர் மீது, பீகார் மாநிலத்தில் கருத்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலம் மோதிஹரியைச் சேர்ந்த ஷாஷ்வத் கவுதம் என்பவர், சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது அரசியல் வியூகமான ‘பீகார் கி பாட்’என்ற கருத்தை பிரசாந்த் கிஷோர் திருடி, ‘பாட் பீகார் கி’என மாற்றி, பிரச்சார இயக்கத்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பிகாரில் நல்லாட்சி வழங்குவதற்கான தமது கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடிவிட்டதாக  புகார். வழக்குப் பதிவு : செய்தி - சரி தான். பிரசாந்த் கிஷோர் தமிழக கூட்டாளிக்கு கற்றுத் தருகிறாரா..? தமிழக கூட்டாளியிடம் கற்றுக் கொள்கிறாரா? என்பதே தெரியவில்லையே? என்னவோ நடக்குது... ஒன்னுமே புரியலை’’எனத் தெரிவித்துள்ளார்.