Asianet News TamilAsianet News Tamil

திருட்டுப் பொருள்களை ஒளித்து வைக்கும் இடமா... போயஸ் கார்டன்?

is poes garden a place for hiding looted things questions raised by public
is poes garden a place for hiding looted things questions raised by public
Author
First Published Nov 18, 2017, 8:28 AM IST


வெள்ளிக்கிழமை நேற்று பணிகளை முடித்து வீடு திரும்பியவர்களுக்கு இரவு நேர செய்தி பரபரப்பூட்டுவதாக மாறியது. பலரது தூக்கமும் பறிபோனது. குறிப்பாக அதிமுக., தொண்டர்களின் தூக்கம். 

கடந்த வாரம் வியாழக்கிழமை துவங்கிய வருமான வரி சோதனைகள் ஐந்து நாட்களில் முடிந்தது என்றாலும், ஐடி., ரெய்டு என்ற அதே பரபரப்பு இன்னமும் தணியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது வருமான வரித் துறை. எதனைத் தேடி இந்த வேட்டை என்று கேட்காதவர்கள் இல்லை. தமிழகத்தைக் கொள்ளை அடித்து அதிபயங்கரமாக சொத்து சேர்த்து வைத்தவர்கள் மீதான தேடல் நடவடிக்கை என்று ஒரு புறம் சொன்னாலும், ஜெயலலிதா இறப்பின் மீதான சந்தேகத்தைத் தோண்டித் துருவவே இந்த நடவடிக்கை என்று ஒரு புறம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை நேற்று இரவு ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்குள் நுழைந்த வருமான வரித் துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டனர். செய்தி பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரன் ஆதரவாளர்கள் குவிந்து போராட்டம் நடத்த, அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த சோதனை குறித்து பல கருத்துகள் அப்போதே பரவினாலும், கண்டனங்கள் பல தெரிவிக்கப்பட்டாலும், அதிமுக.,வினர் பலரோ அது அம்மா வாழ்ந்த கோயில், அதில் சோதனையா என்று வருத்தம் தெரிவித்தனர். 

இதனை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக., எம்.பி., மைத்ரேயன் தனது பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதில்,  “காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில்.” - என்று குறிப்பிட்டார். 

இவரது கருத்துக்கு பலரும் பதில் பதிவுகளை இட்டிருந்தனர். அவற்றில் சில...

கடவுள் இருந்த வீட்டில் களவாணிகள் இருந்ததால் இந்த நடவடிக்கை சரியே...

அம்மா வாழ்ந்த வீட்டில் சோதனை என்பது தொண்டர்களுக்கு வேதனை...

அவர்களின் மரணத்தோடு எல்லாமே போய்விட்டது. தொண்டர்களைப் பொருத்தவரையில் வெறும் நினைவுகள் தான் அலையடிக்கின்றன.அவர்களின் கோபம் , 
அந்த மாபெரும் தலைவியின் சாபம் கூட இப்படி கலங்கடிக்கச் செய்யலாம் என்றே கருதுகிறார்கள்.

அண்ணன் கே.பி.முனுசாமி சொன்னதைப்போல, அம்மா இருக்கும் வரையில் அவரது ஒரு அறிக்கை போதும்! தொண்டன் கட்டுப்படுவதும் பொங்கி எழுவதும் அரங்கேறின. ஆனால் இன்றோ, சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான ஒவ்வொரு செய்தியையும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை!

அம்மாதிரியான உணர்ச்சி சிலருக்கு 'நமது எம்.ஜி.ஆர்' சோதனையின்போது, 'ஜெயா டி.வி' சோதனையின்போதும் வந்திருக்குமே! 'கொடநாடு' என்பதும் அம்மா வாழ்ந்த பெரிய கோவில்தானே! தெரிந்தோ தெரியாமலோ 'அம்மா' முக்கியமான இரண்டு ஜாதி கருப்புப் பண முதலைகளின் ஆதாரமாக இருந்துள்ளார். ஒரு சாரார் மத்திய அரசின் துணை கொண்டு வருமான வரித்துறை சோதனையால் மற்றவரை குடைகிறார். அடுத்தவரும் மாநில கலெக்டர்களைக் கொண்டே குடைகிறார். இப்படி இரண்டுபட்டால் .......?

அந்த குடும்பத்தை உடனிருத்தியதின் விளைவு இது. 

இறப்பிற்கு காரணம் தேடியே இந்த சோதனை.

கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாதல்லவா? ஆனால் ஆகிவிட்டதே!

தவறு நடந்ததால் "சீக்கியர்களின் தங்க கோவிலுக்குள்" ராணுவம் செல்லவில்லையா. 

"நீங்கள் அ.தி.மு.க. காப்பற்ற ஆரமபமுதல் எடுத்த விடாமுயற்சி தற்போழுது தான் சிறிது சிறிதாக கைகூடி வருகிறது. திருட்டு கூட்டத்தினர் அனைவரும் புழல் சிறைக்கு செல்லவிருப்பது வெகு தூரத்தில் இல்லை. 

தெய்வம் வெளியே போய்விட்டது. தெய்வமில்லாத கோயில் பாழடைந்த கட்டடம் தான் "கலங்காதீர்'

என்ன அண்ணே, எல்லா திருட்டு பொருளும் அங்கே தான் ஒளித்து வைத்துள்ளனர். அப்புறம் எப்படி ? நல்லா இருக்கு உங்க வாதம்.

கண்டனம் தெரிவிக்க தயக்கம் ஏன் ? வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் நோக்கில் கடந்த சில மாதங்களாக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள வேதா இல்லத்தில் என்ன ஆவணங்கள் கிடைத்தாலும் அதில் அரசிற்கும் தொடர்பிருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

யார் வீடாக இருந்தால் என்ன? சந்தேகம் அந்த CD குடும்பம் மேல், அவர்கள் கட்டுப்பாட்டில் வேதா இல்லம் அப்புறம் என்ன ?

Follow Us:
Download App:
  • android
  • ios