சுட்டெரிக்கும் வெயிலால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறையா?அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்..!

பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேர்வு எழுதும் பொழுது முகக்கவசம்  கட்டாயம் கிடையாது, மாணவர்கள் விரும்பினால் முகக்கவசம் அணியலாம் என்று தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் ஆரம்பிக்கும் பொழுது வந்த வழிகாட்டுதலாகும்.
 

Is it an early holiday for schools? Minister Anbil Mahesh information

தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து நாளை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேர்வு எழுதும் பொழுது முகக்கவசம்  கட்டாயம் கிடையாது, மாணவர்கள் விரும்பினால் முகக்கவசம் அணியலாம் என்று தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் ஆரம்பிக்கும் பொழுது வந்த வழிகாட்டுதலாகும்.

Is it an early holiday for schools? Minister Anbil Mahesh information

அரசு அமைத்த பிறகு முதல்முறையாக தேர்வு நடத்துகிறோம். கத்திரிவெயில் உள்ளநிலையில் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிறைய பள்ளி குழந்தைகள் ஆல் பாஸ் செய்யுங்கள் என கேட்கும் போது கூட, நான் ஆல்பாஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன். கட்டாயம் தேர்வு தான் என் நிலைபாடு. மாணவர்கள் நலன் கருத்தி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

Is it an early holiday for schools? Minister Anbil Mahesh information

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடைவிடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios