கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம்,அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது எனவும் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடிக்கான சிறப்பு நிதி குறித்து அவ்வப்போது எதிர் கருத்துகளை தெரிவித்து வருகிறார் சிதம்பரம்.இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், அரசு என்ன செய்ய போகிறது? என்று ப. சிதம்பரம் டுவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். 

 ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ந்து 5ம் நாளாக ஐந்தாவது கட்ட அறிவிப்புகளை அறிவித்தார். இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்து வருகிறார்.இதற்கு,பதில் அளிக்கும் வகையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸ் படத்தை பதிவிட்டிருக்கிறார்.

Scroll to load tweet…

அதில், 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, சர்வாதிகாரம் இல்லை. என்று ப. சிதம்பரம் பேசுவது போலிருந்துக் படத்திற்கு கீழாக விஜயகாந்த், படத்தைப் போட்டு, அதில், அப்ப எமர்ஜென்ஸி அறிவிச்சதுக்கு பேரு சர்வாதிகாரம் இல்லாமல் சிலப்பதிகாரமா? என்று கேட்பதாக உள்ளது.