ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ,  வடஇந்திய மாணவரகளுக்கே மீட்பதில்  முக்கியத்துவம்  வழங்குவதாகவும் மீனவர்கள் புகார் கூறியுள்ளனர் .  கொரோனா வைரஸ் உலகையே  அச்சுறுத்தி வருகிறது .  சீனாவைவிட ஈரானில் கொரோனா  வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது .  இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள  தமிழக மற்றும் இந்திய மீனவர்கள்  தங்களை மீட்கும்படி அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர் ,  ஈரான் அருகே உள்ள தீவில் சிக்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் .  வாட்ஸ்அப் வாயிலாக தனது நிலைமையை விளக்கி வீடியோ வெளியிட்டனர் .

 

சீனாவில் 900 மீனவர்கள் சிக்கி தவிப்பதாகவும் ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் அதில் கூறினார்கள் . அதேநேரத்தில் சீனாவில்  தங்கி படிக்கும் வட இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் மூலம் தமிழக மீனவர்கள் அறிந்து கொண்டதாக தெரிகிறது . இந்நிலையில்  மீனவர்கள் தங்கியுள்ள தீவில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .  இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள அவர்கள் தங்களை தாயகம் அழைத்துச் செல்ல மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். 

சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதுவரை 24 நாடுகளில் இந்த வைரஸ் பரவுகிறது .  சீனாவில் வைரஸ் காய்ச்சல் கட்டுபடுத்தப்பட்டாலும் ,   தென்கொரியா ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி ,  ஜப்பான் ,  ஸ்பெயின் ,  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் . இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளார் .  இந்தியாவைப் பொருத்தவரையில் தற்போது 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது .