Asianet News TamilAsianet News Tamil

IPL வழக்கு... கருணாசுக்கு அக்.4 வரை நீதிமன்ற காவல்!

ஐ.பி.எல். போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IPL case...Karunas Judicial custody till Oct 4
Author
Chennai, First Published Sep 27, 2018, 4:38 PM IST

ஐ.பி.எல். போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், கருணாஸ், முதலமைச்சர் மற்றும் அவதூறாக பேசியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 IPL case...Karunas Judicial custody till Oct 4

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை, சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ், கடந்த 16 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். IPL case...Karunas Judicial custody till Oct 4

அப்போது அவர், தமிழக முதலமைச்சர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகவும், சட்டையைக் கழற்றிவிட்டு வந்து நேருக்குநேர் என்னுடன் மோதத் தயாரா' எனப போலீசையும் சாதி ரீதியாகவும், கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்தார் கருணாஸ். அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியது.  

இது தொடர்பாக, கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் போலீஸார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு கருணாஸ், காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கருணாசை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கருணாஸ் ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. IPL case...Karunas Judicial custody till Oct 4

இந்த நிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாதுஎன தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே கருணாசின் ஆதரவாளர்கள், கிரிக்கெட் ரசிகர்களின் பனியனை கழற்றியதோடு, அவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கருணாஸ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், கருணாசை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios