Asianet News TamilAsianet News Tamil

பாலகிருஷ்ணா ரெட்டியை விசாரிக்கும் அதே கோர்ட்... கார்த்தி சிதம்பரம் பதவிக்கு ஆபத்து..?

கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

INX media case...Karthik Chidambaram case transferred Special court
Author
Tamil Nadu, First Published May 30, 2019, 6:12 PM IST

கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ப. சிதம்பரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவர் பதவியில் இருந்தபொழுது, மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.  பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 INX media case...Karthik Chidambaram case transferred Special court

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருந்து வருகிறது.

 INX media case...Karthik Chidambaram case transferred Special court

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்ற விசாரணையின் தீர்ப்பில் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios