ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க;- ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..!

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வெளிநாடு செல்லத் தடை விதித்ததோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதால், அவர் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.