தன்னை கொலை செய்ய சர்வதேச மாபியாக்கள்  முயற்சித்து வருவதாக நித்தியானந்தா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த ஆர்த்தி ராவ் என்ற பெண் பாலியல் புகார் கூறினார்.  அது தொடர்பான வழக்கில் அவருக்கு ஆண்மை தன்மை இல்லை என அவரது சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 

ஆனாலும் அவர்மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்யானந்தா, அதற்கு பிறகு மாயமானார் இதுவரை அவர் எங்கு இருக்கிறார், எங்கு சென்றார் என்ற எந்த விவரமும்  யாருக்கும் தெரியவில்லை  ஆனாலும் சமூக வலைத்தளங்கள்  மூலம் தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் அவர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.   இந்நிலையில் தன்  கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நித்யானந்தா.  வழக்கமாக சிஷ்யர்களுக்கு பேசிவரும் அவர்,  தான் இன்னும் உயிரோடு இருப்பதாகவும்,  காலபைரவர் மற்றும் சிவன் தன்னை காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மாபியா கும்பல் தன்னை கொல்ல திட்டம் தீட்டுவதாகவும்  தெரிவித்துள்ளார் . ஆனால் என்ன  முயன்றாலும் அவர்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என அவர் சவால் விடுத்துள்ளார் ,  தற்போது நடந்து வரும் பிரச்சனைகளை மறந்து  சிவனின் பாதத்தை பூஜித்து அமைதியாக வாழ்ந்து வருவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.  தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  சாதி மதம் இனம் மொழி உள்ளிட்டவர்களுக்கு தான் அப்பாற்பட்டவன் எனவும் அவர் கூறியுள்ளார்