கொரோனா வைரஸ் கையாண்ட விதத்தை வியந்து பாராட்டுகிறேன் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடியை பாராட்டியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உலகமே நம் பிரதமரை வியந்து பாராட்டுகிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  வேகமாக பரவி வருகிறது குறிப்பாக உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு 25 லட்சத்துக்கும் அதகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை இதற்கு 1.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் ஆனாலும் இந்த வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தீவிரமாக தாக்கி வருகிறது.

 

குறிப்பாக அமெரிக்கா ,  இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  வல்லரசு நாடுகளே கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட  இந்தியா சரியான நேரத்தில் ஊரடங்கை அறிவித்து நாட்டில்  இந்த வைரசின் தாக்கத்தை வெகுவாக குறைந்துள்ளது .  அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா இந்த வைரசால் மிக மோசமாக  பாதிக்கும் என  பல நாடுகள் ஆருடம்  கூறிவந்த  நிலையில் இந்தியா சமயோஜத புத்தியை பயன்படுத்தி இந்த வைரசின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொண்டுள்ளது.

  

இது மற்ற நாடுகளை எல்லாம் ஆச்சரியப்பட  வைத்துள்ளது ,  இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வரை இந்தியாவையும் இந்திய பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர் . இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள பில்கேட்ஸ் கொரோனா என்ற நெருக்கடியான காலகட்டத்தில் வைரஸ் கண்காணிப்பு அதன் தடம் அறிதல் ,  மக்களுக்கான சுகாதார முழு சுகாதார சேவை , சரியான நேரத்தில் ஊரடங்கு அதிகம் நோய் பாதித்த பகுதிகளை அடையாளம் கண்டு சோதனைகளை விரிவுபடுத்துதல் ,  நோய் பாதித்தவர்கள் தனிமைப்படுத்துதல் ,  சுகாதாரத்திற்கு தேவையான போதுமான நிதி ஒதுக்கி இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற காரணங்களுக்காக  உங்களை மனதார பாராட்டுகிறேன் தலை வணங்குகிறேன்  என வியந்து பாராட்டியுள்ளார். 

இந்நிலையில் இதை மேற்கோள் காட்டியுள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , உலகமே நமது பிரதமர் மோடியையும் அவர் இந்த தொற்று நோயை கையாண்ட விதத்தையும்  கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.   நாட்டு மக்களை கவனித்துக்கொள்வது மற்றும்  இதுபோன்ற சவாலான  காலகட்டத்தில் உலக சமூகத்திற்கு  உதவுவது போன்றவற்றிற்கு உலகமே மோடியை பாராட்டுகிறது .   அவரின் ஆட்சியின் கீழ் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள் ,  மக்கள் அவரின் தலைமையை நம்புகிறார்கள் என  அமித்ஷா ட்வீட் செய்துள்ளார் .