கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு முழுமையாக குறையவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் திருவாரூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜூக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 6ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

சுமார் 2 வாரமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சருக்கு இணை நோய் இருந்ததால்  தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அரசு ராஜூவ் காந்தி பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். அமைச்சர் காமராஜூக்கு எக்மோ னருவி மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.