ஒட்டுமொத்த தமிழகத்தையும் அச்சுறுத்தி வரும் நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள நிவர் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.  இந்தப் புயல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல் கடலூரிலிருந்து 290 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 

அதே புதுச்சேரியில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிவல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக  வலுப்பெறும், மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கரையை கடக்கும்போது சுமார்  155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளியாக வீசக்கூடும் என எச்சரிக் கப்பட்டுள்ளது. 

ஆகையால் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ள நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும், கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கிய 6 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்து வருகிறது.