இன்பநிதி போட்டோ வெளியானது..கட்சிக்குள் இருக்கும் இளைஞர் அணியினருக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போட்டோ வைரலாகி இருப்பது கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி. இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்துவிட்டாரா.? என்று வாயடைத்து போயிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.

அவ்வப்போது மட்டும் இன்பநிதி குறித்த புகைப்படம் சமூக தளங்களில் வெளிவந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் படத்தை பார்க்கும் போது பெரிய ஆளாக வளர்ந்து இருக்கிறார்.அரும்பிய மீசையுடன் அப்பா உதயநிதியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கிறார் இன்பநிதி.இவ்ளோ பெரிய பையனா? என்று வியக்கும் அதே வேளையில், அரசியல் ரீதியாகவும் கருத்துக்களை வெளியிட்டு பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் இணையதளவாசிகள்.

திமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் காலங்காலமாக குற்றம் சாட்டி வருவது தெரிந்த ஒன்றே. குறிப்பாக, உதயநிதி கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக அந்த கட்சிக்குள்ளேயே இரு தரப்பாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது.சினிமா, அரசியல் என இரு குதிரையிலும் சவாரி செய்து வரும் உதயநிதி தான், திமுகவின் எதிர்காலம் என்பதே அக்கட்சியின் இளைஞர் படையின் எண்ணோட்டமாக உள்ளது. அதேசமயம், சில சீனியர் தலைகள் இதை பெரிதாக ரசிக்கவில்லை.உதயநிதியின் அதிகாரத்தை கட்சியிக்குள் இருக்கும் சீனியர்கள் யாரும் விரும்பவில்லை. அதன் தாக்கமாக ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.உதயநிதி மீதான எதிர்பார்ப்பு இப்படியிருக்க, அவருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது யங் பாய் இன்பநிதியின் போஸ்!
இந்த போட்டோ கட்சிக்குள் இருக்கும் இளைஞர் அணியினருக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போட்டோ வைரலாகி இருப்பது கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.